காரைக்காலில் இருந்து தர்மபுரிக்கு ரெயில் மூலம் 1330 டன் உரம் வந்தது
காரைக்காலில் இருந்து தர்மபுரிக்கு ரெயில் மூலம் 1330 டன் உரம் வந்தது.
தர்மபுரி:
காரைக்காலில் இருந்து தர்மபுரிக்கு ரெயில் மூலம் 1,330 டன் உரம் வந்தது.
ரெயிலில் வந்த உரம்
காரைக்காலில் இருந்து தர்மபுரிக்கு ரெயில் மூலம் 1,330 டன் உரம் வந்தது. இந்த உரத்தை தர்மபுரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா மேற்பார்வையிட்டார். பின்னர் அவற்றை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உரக்கடைகளுக்கு பிரித்து லாரிகளில் அனுப்பும் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணியை வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விற்பனை அலுவலர் அப்துல்லா, மண்டல அலுவலர் மகாலட்சுமி ஆகியோர் உடன் இருந்தனர்.
நெல் சாகுபடி பணி
இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் வசந்தரேகா கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்துள்ளதால் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். நெல் நடவு பணி நடப்பதால் தொடர்ந்து அடி உரம் இடுவதற்கு 1,330 டன் உரம் தர்மபுரி வந்தது. இதில் 666 டன் தர்மபுரி மாவட்டத்திற்கும், 664 டன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அரசு நிர்ணயித்துள்ள விலையில் இந்த உரங்களை பெற்று பயன் பெறலாம் என்றார்.
Related Tags :
Next Story