ஆம்பூர் அருகே ஊராட்சி தலைவியின் கணவர் ஓட, ஓட விரட்டி கொலை


ஆம்பூர் அருகே ஊராட்சி தலைவியின் கணவர் ஓட, ஓட விரட்டி கொலை
x
தினத்தந்தி 22 Dec 2021 9:55 PM IST (Updated: 22 Dec 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே ஊராட்சி தலைவியின் கணவர் ஓட, ஓட விரட்டி கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடியநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆம்பூர்

ஆம்பூர் அருகே ஊராட்சி தலைவியின் கணவர் ஓட, ஓட விரட்டி கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடியநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவி  கணவர் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பெரியகொம்மேஸ்வரம் ஊராட்சி மன்ற தலைவியாக  ஷோபனா என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் கோவிந்தராஜ் (வயது 38), டி.வி.மெக்கானிக்காக உள்ளார்.
இவர் ஆம்பூர் அருகே வீரவர் கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் டி.வி.பழுது சரி செய்யும் கடை நடத்தி வருகிறார். 

நேற்று மாலை கடையில் கோவிந்தராஜ், டி.வி.க்களை சரி செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு மர்மநபர் ஒருவர் வந்துள்ளார்.

ஓட, ஓட விரட்டி கொலை

அந்த நபர் திடீரென கோவிந்தராஜை தாக்கியுள்ளார். கடையிலிருந்து வெளியேறிய அவர் தப்பித்து ஓடினார். ஆனால் அந்த நபர் அவரை ஓட, ஓட விரட்டிச்சென்று தான் வைத்திருந்த கத்தியால் தாக்கினார்.

சரமாரியாக தாக்கப்பட்ட கோவிந்தராஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரை தாக்கிய நபர் உடனே அங்கிருந்து தப்பி விட்டார். சிறிது நேரத்தில் கோவிந்தராஜ் இறந்து விட்டார். 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். 
கொலை செய்யப்பட்டு கிடந்த கோவிந்தராஜின் உடலை அவர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

கோவிந்தராஜை கொலை செய்தவர் யார், எதற்காக ெகாலை செய்தார் என்பது உடனடியாக ெதரியவில்லை.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளியை அடையாளம் கண்டு அவரை கைது ெசய்ய அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதிக போக்குவரத்து நிறைந்த, மக்கள் நடமாட்டம் மிகுந்த தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஊராட்சி தலைவியின் கணவர் கொலை ெசய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story