காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு: எலி மருந்து தின்று பட்டதாரி பெண் தற்கொலை காதலனுக்கு போலீசார் வலைவீச்சு


காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு: எலி மருந்து தின்று பட்டதாரி பெண் தற்கொலை காதலனுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 Dec 2021 9:56 PM IST (Updated: 22 Dec 2021 9:56 PM IST)
t-max-icont-min-icon

வேதாரண்யம் அருகே காதலித்து விட்டு திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் எலி மருந்து தின்று பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வேதாரண்யம்:-

வேதாரண்யம் அருகே காதலித்து விட்டு திருமணம் செய்ய காதலன் மறுத்ததால் எலி மருந்து தின்று பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

காதல்-திருமணத்துக்கு மறுப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தி கிராமத்தை சேர்ந்தவர் வித்யா(வயது21). இவர் பி.பி.ஏ. பட்டதாரி. செட்டிப்புலம் கிராமத்தை சேர்ந்த எம்.ஏ. பட்டதாரி புகழேந்தி(24). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் காதலித்து வந்தனர். 
கடந்த சில நாட்களுக்கு முன்பு வித்யா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி புகழேந்தியிடம் கேட்டார். அதற்கு புகழேந்தி மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வித்யா வேதாரண்யம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் புகழேந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

எலிமருந்து தின்று தற்கொலை

இந்த நிலையில் வித்யாவிடம், ‘என் மீது போலீ்சில் புகார் செய்து விட்டாயே, நான் விஷம் குடித்து சாக போகிறேன்’ என கூறி புகழேந்தி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த நிலையில் காதலன் திருமணத்துக்கு மறுத்ததாலும், தற்கொலை மிரட்டல் விடுத்ததாலும் விரக்தியில் இருந்த வித்யா சம்பவத்தன்று வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் கோபுரவாசலுக்கு வெளியே எலிமருந்தை (விஷம்) தின்றார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வித்யா நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வித்யா நேற்று பரிதாபமாக இறந்தார். 

காதலனுக்கு வலைவீச்சு

இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள புகழேந்தியை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story