விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 22 Dec 2021 9:57 PM IST (Updated: 22 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

திருவண்ணாலை

திருவண்ணாமலை எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கடந்த 7.1.2017 அன்று மாட்டு வண்டியில் செங்கத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆணாய்பிறந்தான் கிராமம் அருகில் வரும் போது அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை மோட்டார் வாகன விபத்து சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. கடந்த 8.11.2019 அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி விபத்தில் பாதிக்கப்பட்ட கிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சத்து 57 ஆயிரமும், வட்டி மற்றும் செலவு தொகையுடன் இழப்பீடு வழங்க உத்தவிட்டார். 

ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காமல் காலதாமதம் செய்து வந்து உள்ளது. இதையடுத்து கடந்த 2.11.2021 அன்று மீண்டும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகன்நாதன் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதை தொடர்ந்து நேற்று கோர்ட்டு ஊழியர்கள் திருவண்ணாமலை பஸ் நிலையத்திற்கு ெசன்றனர். அங்கு திருவண்ணாமலையில் இருந்து சென்னை செல்ல நிறுத்தப்பட்டிருந்த ஏ.சி. பஸ்சை ஜப்தி செய்தனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story