சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டது


சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டது
x
தினத்தந்தி 22 Dec 2021 9:57 PM IST (Updated: 22 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டதாக, கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

சோளிங்கர்

சோளிங்கர் நகராட்சியில் 27 வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டதாக, கருத்துக்கேட்பு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.

27 வார்டாக மறு வரையறை 

சோளிங்கர் தேர்வுநிலை பேரூராட்சியை கடந்த நவம்பர் மாதம் 1-ந் தேதி நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதைத்தொடர்ந்து ஏற்கனேவே இருந்த 18 வார்டுகளை தற்போது 27 வார்டாக மறு வரையறை செய்யப்பட்டது. 

வார்டு மறுவரையறை குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் சோளிங்கர் வாலாஜா ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வி மரியம்ரெஜுனா, வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் குபேந்திரன், சோளிங்கர் நகராட்சி ஆணையர் பரந்தாமன், தாசில்தார் வெற்றிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்கள் தொடர்பு அதிகாரி அசோக்குமார் வரவேற்றார்.

வரிகள் குறைவாக இருக்க வேண்டும்

கூட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 27 வார்டு சீரமைப்பு குறித்து கருத்து மற்றும் ஆலோசனை கேட்கப்பட்டது. அதில் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு தினக்கூலி செய்து வருகின்றனர். நகராட்சி விதிக்கப்படும் அனைத்து வரிகளும் குறைவாக இருக்க வேண்டும்.

 சில வார்டுகளில் மறுவரையறை செய்ய வேண்டும், என ஆலோசனைக்கூட்டத்தில் காங்கிரஸ் நகர தலைவர் கோபால், பா.ம.க. வழக்கறிஞர் சக்கரவர்த்தி, வியாபாரச் சங்கத் தலைவர் அன்பு, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், வர்த்தகர் அணி மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நகர செயலாளர் சீனிவாசன் மற்றும் காங்கிரஸ் கட்சிைய சேர்ந்த ராஜா, நரசிம்மன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர். 

கூட்டத்தில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர் எபினேசன், ஜெயராமன், கிராம நிர்வாக அலுவலர்கள், அனைத்துக் கட்சி முக்கிய பிரமுகர்கள் குடியிருப்பு நலச் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story