வெளிநாட்டில் இருந்து வந்த 100 பேருக்கு ‘ஒமைக்ரான்’ பாதிப்பு இல்லை
வெளிநாட்டில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்த 100 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை, என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர்
வெளிநாட்டில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்த 100 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை, என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒமைக்ரான் பரவல்
வேலூர் மாவட்டத்தில் ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்தப் படுகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்தவுடன் முதலில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் பாதிப்பு இல்லை என்றாலும் 7 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப் படுத்தப்படுகின்றனர். அதற்கு பிறகு மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தால் மட்டுமே அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
பாதிப்பு இல்லை
அதன்படி வேலூர் மாவட்டத்துக்கு இதுவரை 149 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதில் 100 பேருக்கு ஒருவார காலம் தனிமைப்படுத்தல் முடிந்தபிறகு பரிசோதனை செய்ததில் ஒமைக்ரான் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.
மேலும், 49 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முதல் கட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 7 நாட்கள் தனிமைக்கு பின்னர் மீண்டும் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
வெளிநாடுகள் மட்டுமன்றி வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களும் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story