3 நாட்களுக்கு பிறகு சேரிபாளையம் அரசு பள்ளி இன்று திறப்பு
3 நாட்களுக்கு பிறகு சேரிபாளையம் அரசு பள்ளி இன்று திறப்பு
நெகமம்
நெகமம் அருகே சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பயிலும் 760 மாணவ மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முதல் கட்ட முடிவில் 9-ம் வகுப்பில் படிக்கும் 3 மாணவர்கள், 6-ம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பள்ளியில் இருந்து மாணவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பள்ளி வளாகம், வகுப்பறைகள் கிருமி நாசினி அடிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.
இதையடுத்து 2-ம் கட்ட பரிசோதனை முடிவில் 10-ம் வகுப்பில் 2 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மருத்துவர் அறிவுரையின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்பட்டனர். சேரிபாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு 3 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் 3நாட்களுக்கு பள்ளி இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி நேற்று மீண்டும் பள்ளி மற்றும் பள்ளி வகுப்பறை, கழிப்பிடங்கள், வளாகங்கள், இருக்கைகள், கரும்பலகை ஆகிய இடங்களில் ஊராட்சி பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து, பிளிச்சிங் பவுடர் தூவினர். கடந்த 4 நாட்களாக பள்ளியில் அனைத்து இடங்களிலும் ஊராட்சி பணியாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story