மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 22 Dec 2021 10:30 PM IST (Updated: 22 Dec 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

திருப்பூர், 
திருப்பூர் காலேஜ் ரோடு ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 26). இவர் வஞ்சிப்பாளையம் பகுதியில் ஓட்டல் வைத்துள்ளார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டுக்கு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் மற்றும் போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எஸ்.வி.காலனியை சேர்ந்த வாசுதேவன் (24), திருமுருகன்பூண்டியை சேர்ந்த மணிகண்டன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story