வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் நேற்று சீல் வைத்தனர்
வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் நேற்று சீல் வைத்தனர்
காங்கேயம்,
காங்கேயம் நகராட்சி நிர்வாகத்துக்கு உட்பட்ட வணிக நிறுவனங்களில் வாடகை செலுத்தாத 2 கடைகளுக்கு நகராட்சி அலுவலர்கள் நேற்று ‘சீல்’ வைத்தனர்.
வாடகை
காங்கேயம் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்கு உரிய வாடகை செலுத்தாவிட்டால், கடைகளைப் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு செய்திருந்தது. இந்த நிலையில் பஸ் நிலையம் அருகே, தினசரி சந்தைப் பகுதியில் உள்ள ஒரு கடை ரூ.98 ஆயிரம், மற்றொரு கடை ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் வாடகை பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இந் தகடைகளுக்கு வாடகை செலுத்தும்படி கடைக்காரர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனாலும் வாடகை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த 2 கடைகளுக்கும் சீல் வைக்கும்படி நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி 2 கடைகளும் நகராட்சி வருவாய் ஆய்வாளர் பி.செல்வகுமார், வருவாய் உதவியாளர் ஜே.வருண் ஆகியோர் சென்று கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.
நடவடிக்கை
இது குறித்து காங்கேயம் நகராட்சி ஆணையர் எஸ்.வெங்கடேஸ்வரன் கூறும்போது “காங்கேயம் நகராட்சிக்கு நிர்வாகத்துக்கு உட்பட்ட கடைகளுக்கு நவம்பர் 2021 தேதி வரை வாடகை பாக்கி நிலுவை உள்ள கடைக்காரர்கள் வாடகைத் தொகையினை உடனே நகராட்சி அலுவலகத்தில் செலுத்தவும். தவறும் பட்சத்தில் கடைகளைப் பூட்டி சீல் வைக்கப்படும்”. என்றார்.
Related Tags :
Next Story