கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் அந்த பையினுள் 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் அவர், விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த மதிவாணன் (வயது 29) என்பதும், இவர் பழைய பஸ் நிலையம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மதிவாணனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் விழுப்புரம் அருகே சிந்தாமணி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த
விழுப்புரம் கம்பன் நகரை சேர்ந்த கண்ணன் மகன் குணசேகரன் என்கிற அரவிந்த் (வயது 20), வெங்கடேசன் மகன் சூர்யா (21), விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை கோவிந்தசாமி நகரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அரவிந்த் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story