தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Dec 2021 11:18 PM IST (Updated: 22 Dec 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

நூலக சாலை பழுது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி மேல்பாளையத்தில் முழுநேர மாவட்ட கிளை நூலகம் உள்ளது. நாள் முழுவதும் வாசகர்கள் நூலகத்துக்கு வந்து பல புத்தகங்களை படித்துச் செல்கிறார்கள். சமீபத்தில் பெய்த மழையால் நூலகத்துக்கு செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. பழுதான சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-க.சண்முகம், செங்கம். 

சேதமடைந்த சிறு பாலம் 

வேலூர் ஓல்டு டவுனில் உத்திரியமாதா கோவில் அருகே கால்வாய் மீது சிறு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கால்வாய் அடைப்பை சரிசெய்யும்போது பாலத்தின் அருகில் பள்ளம் தோண்டப்பட்டதால் பாலம் சேதம் அடைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. பாலத்தை மீண்டும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்ராஜ், வேலூர்.

கால்வாய் மீது மூடி போடுவார்களா?

வேலூர் ஓல்டு டவுனில் இருந்து சலவன்பேட்டை செல்லும் வழியில் தோல் கிடங்கு தெரு உள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கால்வாய் மீது மூடிகள் போடப்படாததால், அந்த வழியாக எதிர் எதிரே வாகனங்கள் வந்தால் நடந்து செல்வோர் ஒதுங்க சிரமமாக உள்ளது. அந்த நேரத்தில் தவறி கால்வாயில் விழும் ஆபத்து உள்ளது. எனவே கால்வாயில் மூடி போட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-நீலமேகம், ஓல்டு டவுன்.

Next Story