கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 22 Dec 2021 11:18 PM IST (Updated: 22 Dec 2021 11:18 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற வாலிபர் கைது

வாலாஜா

வாலாஜா அணைக்கட்டு ரோடு பகுதியில் நேற்று சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அணைக்கட்டு ரோட்டில் பலமுறை அவ்வழியாக சுற்றித்திரிந்த நபரை அழைத்து போலீசார் மடக்கி விசாரணை செய்தனர். 

அந்த நபரை சோதனை செய்ததில் அவரது பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர் வாலாஜா கீழ் படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆலி என்ற ஆனந்த் (வயது 36) என்பது தெரியவந்தது.
 இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிவு செய்து சுமார் 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து ஆனந்தை கைது செய்தார்.

Next Story