தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Dec 2021 11:34 PM IST (Updated: 22 Dec 2021 11:34 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
செங்கோடி தொடக்கப்பள்ளியில் இருந்து குமரங்குடிக்கு செல்லும் சாலையில் சேனபறகுளம் உள்ளது. இந்த குளத்து பகுதியில் செல்லும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                -ஜெஸ்பின் சிராயன்குழி. 
சேதமடைந்த கட்டிடம்
ஆரல்வாய்மொழி, பெருமாள்புரத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் சமையல் அறையின் மேற்பகுதியில் கான்கிரீட் தளத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                   -செல்வகுமரன், ஆரல்வாய்மொழி.
சீரான குடிநீர் தேவை
நாகர்கோவில் மாகராட்சிக்கு உட்பட்ட கீழராமன்புதூர் பகுதியில் சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படுவது இல்லை. வினியோகம் செய்யப்படும் குடிநீரும் கலங்கிய நிலையில் வருகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
                                                      -சந்திரன், கீழராமன்புதூர். 
விபத்து அபாயம்
சாமியார்மடம் அருகில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் பின் பகுதியில் பட்டணம் கால்வாய் செல்கிறது. கால்வாயில் பள்ளியின் சுற்றுச்சுவர் பகுதியில் மண்  இடிந்து விழுந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயின் கரையில் பக்கச்சுவர் அமைத்து விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                  -பா.ரவிச்சந்திரன், தேரிவிளை. 
சாலை சீரமைக்கப்படுமா?
தோவாளை ரெயில் நிலையம் அருகே குளத்துவிளைக்கு செல்லும் சாலையில் ரெயில்வே பாலம் உள்ளது. இந்த பாலம் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழையால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு சகதியாக காணப்படுகிறது. இதனால், அவசர தேவைக்கு கூட அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.
                                                                      -சரவணன், தோவாளை.
சேதமடைந்த நிழற்குடை
மெதுகும்மல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செம்மான்விளை பறம்புக்கோடு பகுதியில் ஒரு நிழற்குடை இருந்தது. இந்த நிழற்குடை பல ஆண்டுகளாக இடிந்து விழுந்து காணப்படுகிறது. இதனால், அந்த பகுதி மக்கள் நிழற்குடையை பயன்படுத்த முடியாமல் பெரும் அவதிக்குள்ளாவதுடன் வெயில், மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                             -நே.கோபகுமார், ஆலவிளை, எஸ்.டி.மங்காடு.

Next Story