வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கந்தம்பாளையம்:
கந்தபாளையம் மேற்கு தெருவைச் சேர்ந்த தங்கவேலு மகன் பிரபாகரன் (வயது 33). இவர் கந்தம்பாளையத்தில் உள்ள தனியார் இரும்பு ஆலையில் பணியாற்றி வந்தார். இவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மேலும் மேல்சிகிச்சைக்கு செல்ல பிரபாகரனிடம் போதிய பணம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வீட்டில் விஷம் குடித்து மயங்கிய அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் இறந்தார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story