மர்ம நோய் தாக்கி இறக்கும் செம்மறி ஆடுகள்
தளவாய்புரம் அருகே மர்ம நோய் தாக்கி செம்மறி ஆடுகள் இறந்து வருகின்றன.
தளவாய்புரம்
தளவாய்புரம் அருகே மர்ம நோய் தாக்கி செம்மறி ஆடுகள் இறந்து வருகின்றன.
செம்மறி ஆடுகள்
தளவாய்புரம் அருகே உள்ள ஜமீன்கொல்லங்கொண்டான் கிராமத்தில் சுமார் 30 பேர் 10 ஆயிரம் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இதனை தான் இவர்கள் தொழிலாக நம்பியுள்ளனர். கடந்த வாரம் திடீரென மர்ம நோயால் சில செம்மறி ஆடுகள் இறந்தது.
இதுபற்றி இவர்கள் கால்நடை மருத்துவரிடம் கூறிய போது, அதனை பிரேத பரிசோதனை செய்து விட்டு பின்னர் எங்களிடம் குழி தோண்டி புதைக்க சொல்லி விட்டார். இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் மர்ம நோயால் சுமார் 10 செம்மறி ஆடுகள் இறந்து விட்டது. இதுபற்றி ஆடுகளை வளர்த்து வரும் முத்துராஜ், தங்கப்பாண்டி, கோபால் ஆகியோர் மேலும் கூறியதாவது:-
கடந்த வாரம் மர்மமான நோயால் சில செம்மறி ஆடுகள் இறந்து விட்டது. இதற்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இந்தநிலையில் மீண்டும் நேற்றுக்காலை சுமார் 10 செம்மறி ஆடுகள் மர்ம நோயால் இறந்து விட்டது. இங்குள்ள கால்நடை மருத்துவர் என்ன நோய் என்று சொல்ல மறுக்கிறார். இங்குள்ள ஆடுகளுக்கு இந்த நோய் வராமல் இருக்க மருந்து, மாத்திரை எதுவும் இவர் தரவில்லை. இதுபற்றி பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டோம். அவர் உயர் அதிகாரியிடம் கூறி உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என ஆறுதல் கூறினார்.
நிவாரணம்
தற்போது ஒரு செம்மறி ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விலைபோகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் கிடைக்கவும், இங்கு இருக்கின்ற ஆடுகளுக்கு மர்ம நோய் தாக்காமல் இருக்கவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story