விபத்தில் 2 ஆட்டோ டிரைவர்கள் சாவு
வெவ்வேறு விபத்துகளில் 2 ஆட்டோ டிரைவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
விருதுநகர்
வெவ்வேறு விபத்துகளில் 2 ஆட்டோ டிரைவர்கள் பரிதாபமாக இறந்தனர்.
ஆட்டோ டிரைவர்
ராஜபாளையம் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 47). சொந்தமாக ஆட்டோ வைத்திருந்த இவர் அவரே ஆட்டோவை ஓட்டி வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் தனது மனைவி மகேஸ்வரியை சிகிச்சைக்காக தனது ஆட்டோவில் விருதுநகருக்கு அழைத்து வந்தார். சிகிச்சை முடிந்து ஆட்டோவில் ராஜபாளையம் திரும்பி கொண்டிருந்தார். அப்போது சிவகாசி ரோட்டில் நாராயணபுரம் அருகே எதிர்பாராத வகையில் ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் மணிகண்டன் மற்றும் அவரது மனைவி மகேஸ்வரி இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு மணிகண்டன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மற்றொரு சம்பவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இடையன்குளத்தை சேர்ந்த ராஜாலிங்கம் மகன் பண்ணையார் (வயது 40). லோடு ஆட்டோ டிரைவர். லோடு ஏற்றுவதற்காக ராஜபாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோதைநாச்சியார்புரம் விலக்கு அருகே வரும் போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்தது. இதில் பண்ணையார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து விசாரிக்கின்றனர்.
Related Tags :
Next Story