அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்


அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல்
x
தினத்தந்தி 23 Dec 2021 5:46 PM GMT (Updated: 2021-12-23T23:16:39+05:30)

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் 2 நாட்கள் நடந்தது.

உத்தமபாளையம்: 

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடந்தது. இதில் பெரியகுளம், தேனி ஆகிய நகர வார்டு செயலாளர் மற்றும் பழனிசெட்டிபட்டி பேரூர் வார்டு செயலாளர் பதவிக்கான வேட்புமனுக்களை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டு தேர்தலை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள 177 நகர வார்டு செயலாளர் பதவிக்கு 350 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதேபோல் 12 ஊராட்சி ஒன்றிய கிளைகளுக்கு 1,615 பேரும், 330 பேரூராட்சி வார்டு பதவிக்கு 750 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நிகழ்ச்சியில் தேனி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களான அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமிபாண்டியன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., ஏ.கே.சீனிவாசன், ஜக்கையன், நெல்லை மாவட்ட செயலாளர் கணேசராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story