கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து மரணம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 23 Dec 2021 6:57 PM GMT (Updated: 23 Dec 2021 6:57 PM GMT)

கருணாநிதியின் நெருங்கிய நண்பர் கவுண்டம்பட்டி முத்து மரணம் அடைந்தார்.

நச்சலூர், 
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கவுண்டம்பட்டி முத்து (வயது 96). இவர் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக முத்து நேற்று அதிகாலை மரணமடைந்தார். இவரது உடலுக்கு தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் நேற்று மாலை கவுண்டம்பட்டியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.  மொழிப்போர் தியாகியான முத்து, 1956-ம் ஆண்டு கருணாநிதி தலைமையில் நங்கவரம் பண்ணையை எதிர்த்து 10 ஆயிரம் விவசாயிகளோடு சென்று, ஏர் பூட்டி உழும் போராட்டத்தை முன்னெடுத்து ‘உழுதவனுக்கே நிலம் சொந்தம்', ‘நாடு பாதி, நங்கவரம் பாதி' என்ற போராட்டத்தில் ஈடுபட்டவர். 1957-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குளித்தலை தொகுதியில் முதல் முறையாக கருணாநிதி போட்டியிட்டபோது அவருக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு அவரது வெற்றிக்கு பாடுபட்டுள்ளார். கருணாநிதியுடன் பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றுள்ளார்.


Next Story