பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-தொழிலாளர் சங்கத்தினர் மனு


பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்-தொழிலாளர் சங்கத்தினர் மனு
x
தினத்தந்தி 23 Dec 2021 7:28 PM GMT (Updated: 23 Dec 2021 7:28 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் சி.ஐ.டி.யூ., பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கலெக்டரிடம் சி.ஐ.டி.யூ., பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
பட்டாசு ஆலைகள்
பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சி.ஐ.டி.யூ. சார்பில் கோரிக்கை மனுவை மாவட்ட செயலாளர் தேவா, பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன், பொருளாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகாசி நகர் செயலாளர் சுரேஷ்குமார், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயபாரத் ஆகியோர் விருதுநகரில் கலெக்டர் மேகநாதரெட்டியிடம் மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது:-
சிவகாசியை சுற்றி 1,070 பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாகவும், சார்பு தொழில்கள் மூலமாக மறைமுகமாகவும் 8 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூக, பொருளாதார வளர்ச்சி பட்டாசு தொழிலையே நம்பியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மாசு பிரச்சினையை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் பட்டாசை தடை செய்ய வேண்டும் என மனுதாக்கல் செய்தனர். 
திறக்க வேண்டும்
இந்த வழக்கில் சரவெடி தயாரிப்பு மற்றும் விற்பனையை தடைசெய்தும், பேரியம் நைட்ரேட் வேதிபொருளை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதை தடை செய்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பட்டாசுக்கு முழுமையான தடையில்லை என்று வெளிப்படையாக நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் தற்போதுள்ள பட்டாசு தயாரிப்பு பணிகள் கடந்த கால நிலையிலேயே தொடர்ந்து நடைபெறுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story