ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு


ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 24 Dec 2021 5:42 PM GMT (Updated: 2021-12-24T23:12:33+05:30)

ரிஷிவந்தியம் அருகே கிணற்றில் மூழ்கி தொழிலாளி உயிாிழந்தாா்.


ரிஷிவந்தியம், 

 ரிஷிவந்தியம் அருகே  லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் வல்லரசு (வயது 20). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை அதே கிராமத்தை சேர்ந்த பச்சை மகன் அஞ்சாமணி என்பவரது வயலில், கிணற்றில் இருந்த நீர் மூழ்கி மோட்டாரை வெளியே எடுத்து வரும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.  

அப்போது  கிணற்றினுள் இருந்த மோட்டாரில் கயிறு கட்டுவதற்காக  நீருக்குள்  சென்ற வல்லரசு வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. மேலும் கயிறும் அறுந்து விழுந்துவிட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் கிணற்றில் குதித்து தேடி பார்த்தும், கிடைக்கவில்லை.

 இதற்கிடையே தகவல் அறிந்த திருக்கோவிலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 3 மோட்டார்கள் வைத்து தண்ணீரை வெளியேற்றினர். அதில் கிணற்றுக்குள் வல்லரசு இறந்த நிலையில் பிணமாக கிடந்தார். 

இதையடுத்து தீயணைப்புவீரர்கள் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர்.  இதுகுறித்த தகவலின்பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story