மேலமாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்


மேலமாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 25 Dec 2021 8:28 PM GMT (Updated: 2021-12-26T01:58:04+05:30)

மேலமாத்தூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

பெரம்பலூர்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கூத்தூர் தொகுப்பு துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் அரியலூர் மேற்கு பகுதி, பி.ஆர்.நல்லூர், ஜெமீன் பேரையூர், கூத்தூர், கூடலூர், குளத்தூர், ராமலிங்கபுரம், ரசுலாபுரம், உசேன்நகரம், அல்லிநகரம், மேலமாத்தூர், வெண்மணி, திம்மூர் மேத்தால் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமாிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story