மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது


மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Dec 2021 7:16 PM GMT (Updated: 2021-12-27T00:46:40+05:30)

மது விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வாணதரியன்பட்டிணம் கிராமத்தை சேர்ந்த அஞ்சலை(வயது 35), தத்தனூர் பொட்டக்கொல்லை கிராமத்தை சேர்ந்த அன்புமணி(51), நல்லணம் கிராமத்தை சேர்ந்த சவுந்தரராஜன்(49) ஆகியோர் அப்பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story