கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி புதிதாக 12 பேருக்கு பாதிப்பு உறுதி


கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி புதிதாக 12 பேருக்கு பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 26 Dec 2021 8:11 PM GMT (Updated: 2021-12-27T01:41:34+05:30)

கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். புதிதாக 12 பேருக்கு பாதிப்பு உறுதியானது.

கடலூர், 

12 பேருக்கு பாதிப்பு

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 64 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 12 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னையில் இருந்து குமராட்சி வந்த ஒருவருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த புவனகிரியை சேர்ந்த ஒருவருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 63 ஆயிரத்து 609 பேர் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று 6 பேர் குணமடைந்து சென்றனர். இது வரை 875 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மேலும் ஒருவர் பலியானார். இதன் விவரம் வருமாறு:-

பலி

கடலூரை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா பாதித்த 71 பேர் கடலூர் மாவட்ட ஆஸ்பத்திரிகளிலும், 11 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story