ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம்


ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 27 Dec 2021 7:45 PM GMT (Updated: 27 Dec 2021 7:45 PM GMT)

அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தமானது.

அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டையில் நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் விற்பனை மந்தமானது. 
ஆட்டுச்சந்தை 
அருப்புக்கோட்டையில் வாரந்தோறும் திங்கட்கிழமையன்று  ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆட்டுச்சந்தையில்  விளாத்திகுளம், புதூர், விருதுநகர், காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள்  வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், உள்ளிட்ட பல்வேறு இன ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வருவர். 
இந்த சந்தையில் வழக்கமாக புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு விற்பனை அமோக நடைபெறும். வழக்கம் நேற்றும் ஆட்டு சந்தை நடைபெற்றது. 
விற்பனை மந்தம் 
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பேர் பல்வேறு வகையான ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்று விற்பனை மந்தமாக இருந்தது. சிலர் ஆடுகளை விற்க முடியாமல் திரும்ப கொண்டு சென்றனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- 
இந்த பகுதிகளில் நடைபெறும் சந்தைகளில் மிகப்பெரியது அருப்புக்கோட்டையில் தான். இந்த சந்தையில் வழக்கத்தை காட்டிலும் நேற்று விற்பனை மந்தமானது. தற்போது ஆடுகளுக்கு நோய் தாக்குதல் இருப்பதால் விற்பனை மந்தமாக இருக்கலாம். மார்கழி மாதம் என்பதாலும் அய்யப்ப பக்தர்கள் மலைக்கு போகும் காலம் என்பதாலும் விற்பனை குறைந்து இருக்கலாம். 
நம்பிக்கை 
மழையால் ஏற்பட்ட சேதத்தை கால்நடைகளை விற்று ஈடுகட்ட நினைத்தாலும் மந்தமான விற்பனையால் ஆடுகளை விற்பனை செய்யமுடியாமல் தவித்து வருகிறோம். 
வெளியூரில் இருந்து வாடகை வாகனத்தில் ஆடுகளை கொண்டு வந்து விற்கமுடியாமல் மீண்டும் வாடகை வாகனங்களிலேயே கொண்டு செல்ல கூடிய நிலை உள்ளது. 
இதனால் வாகனங்களுக்கு வாடகை செலவு எங்களுக்கு  கூடுதல் சுமையாகி விட்டது.  எனினும் இனிவரும் வாரங்களிலாவது விற்பனை  அதிகரிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். 
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story