டேக்வாண்டோ போட்டியில் உசிலம்பட்டி மாணவர்கள் சாதனை


டேக்வாண்டோ போட்டியில் உசிலம்பட்டி மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 28 Dec 2021 7:56 PM GMT (Updated: 2021-12-29T01:26:50+05:30)

டேக்வாண்டோ போட்டியில் உசிலம்பட்டி மாணவர்கள் சாதனை

உசிலம்பட்டி
திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி மாணவன் பிரிதிவிராஜன் கலந்து கொண்டு 80 கிலோவுக்கு கீழ் உள்ள எடைப்பிரிவில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தார். அதேபோல் மாணவி புவனேஸ்வரி 59 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தார். இவர்கள் 2 பேரும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர். மேலும் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியை சேர்ந்த சஷ்சய் சாருகேஷ் 58 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடமும், அதே கல்லூரியை சேர்ந்த யுவன் 63 கிலோ பிரிவில் 3-வது இடமும் பெற்றனர். 46 கிலோ பிரிவில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியைச் சேர்ந்த தீபிகா 2-வது இடம் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்சியாளர்கள் யுவராஜா, நடராஜன் ஆகியோர்களையும் காமராஜர் பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன், மதுரை டேக்வாண்டோ அகாடமி தலைமை பயிற்சியாளர் நாராயணன் மற்றும் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் உடற்கல்வி இயக்குனர்கள் பாராட்டினர்.

Next Story