நகை திருட்டு


நகை திருட்டு
x
தினத்தந்தி 29 Dec 2021 5:14 PM GMT (Updated: 2021-12-29T22:44:14+05:30)

கோவில் கும்பாபிஷேக விழாவில் நகை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

பரமக்குடி, 
மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது70). இவரும் இவரது மனைவி ராமாயி என்பவரும் பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் உள்ள அங்காள பரமேசுவரி கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து வந்துள்ளனர். அப்போது ராமாயி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை காண வில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பரமக்குடி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story