ராசிபுரத்தில் தாசில்தார் அலுவலக பதிவறை எழுத்தர் தற்கொலை


ராசிபுரத்தில் தாசில்தார் அலுவலக பதிவறை எழுத்தர் தற்கொலை
x
தினத்தந்தி 29 Dec 2021 6:16 PM GMT (Updated: 2021-12-29T23:46:29+05:30)

ராசிபுரத்தில் தாசில்தார் அலுவலக பதிவறை எழுத்தர் தற்கொலை

ராசிபுரம்:
ராசிபுரத்தில் தாசில்தார் அலுவலக பதிவறை எழுத்தர் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமாகவில்லை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் பிற்பட்டோர் காலனியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் சசிகுமார் (வயது 43). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் மோகனூர் தாசில்தார் அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக வேலை பார்த்து வந்தார். 
இந்த நிலையில் சசிகுமார் தீராத நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்றும், குணம் அடையாததால் மனம் உடைந்த நிலையில் சசிகுமார் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்த சசிகுமார் திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
விசாரணை
இதுபற்றி சசிகுமாரின் தந்தை ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தற்கொலை செய்து கொண்ட சசிகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story