கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 10 பேருக்கு சிறை


கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 10 பேருக்கு சிறை
x
தினத்தந்தி 29 Dec 2021 8:11 PM GMT (Updated: 29 Dec 2021 8:11 PM GMT)

விருதுநகர் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 10 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர், 
விருதுநகர் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 10 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
தேர்தல் முன்விரோதம் 
விருதுநகர் அருகே உள்ள வடமலைக்குறிச்சி கிராமத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, இரு கோஷ்டியினரிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் அவ்வப்போது மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் ஆமத்தூர் போலீசார் இருதரப்பையும் சேர்ந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அதில் ஒரு தரப்பை சேர்ந்த கருப்பசாமி, வீரமல்லன் ஆகிய 2 பேரும் நாட்டு வெடி குண்டு தயாரித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து ஒரு தரப்பை சேர்ந்த நபரை, மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வழிமறித்து தாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு 
இதனைத் தொடர்ந்து ஆமத்தூர் போலீசார் குற்றவியல் நடைமுறைச்சட்டம் 110-ன்படி தங்கப்பாண்டி, அன்பு, விநாயக முருகன், பாலமுருகன், கருப்பசாமி, மற்றொரு தரப்பை சேர்ந்த மாதவன், குருசாமி, பொன்ராஜ், வீரமல்லன், கருப்பசாமி ஆகிய 10 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. முன்பு ஆஜர்படுத்தினர்.
விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ. கல்யாணகுமார், ஆஜர்படுத்தப்பட்ட 10 பேருக்கும் குற்றத் தடுப்பு சட்டம் 172-வது பிரிவின்கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத தலா ஒரு வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். தொடர்ந்து 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story