பெண்களிடம் நகை திருட்டை தடுக்க சிறப்பு ஏற்பாடு


பெண்களிடம் நகை திருட்டை தடுக்க சிறப்பு ஏற்பாடு
x
தினத்தந்தி 30 Dec 2021 5:29 PM GMT (Updated: 2021-12-30T22:59:28+05:30)

பெண்களிடம் நகை திருட்டை தடுக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சிவகங்கை, 
புத்தாண்டை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டியில் பாதுகாப்பு பணியில் சுமார் ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.
ஆங்கில புத்தாண்டு
சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நாளை ஆங்கில புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் ஆயிரக்கணக்கானவர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
 கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில் ஒரு இடம் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு உரிய இடமாகும். இங்கு சுமார் 5 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பி ரண்டுகள், 32 இன்ஸ்பெக்டர்கள், 107 சப்-இன்ஸ் பெக்டர்கள் உள்பட ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத் தப்படுவார்கள்.
கண்காணிப்பு
 மேலும் இந்த முறை கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் நகைகளை திருடுவதை தடுக்கும் வகையில் பெண் போலீஸ், நாட்டுநலப்பணி மற்றும் தேசிய மாணவர் படையை சேர்ந்த சுமார் 100 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் இவர்கள் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் தங்க நகைகளை அவர்கள் அணிந்துள்ள புடவைகளுடன் சேர்த்து பாதுகாப்பாக வைத்துக் கொள்வதற்காக பெண்களுக்கு சேப்டி பின்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 1 லட்சம் சேப்டி பின்கள் வாங்கப் பட்டு உள்ளன. 
இதுதவிர பிக்பாக்கெட் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடு வோரை பிடிப்பதற்காக சாதாரண உடை அணிந்த சுமார் 100 போலீசார் அந்த பகுதியில் தொடர் கண்காணிப்பில் இருப ்பார்கள் மேலும் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் சென்றுவருவதற்காக தனித்தனியாக பிள்ளையார்பட்டி கோவில் முழுவதும் 40 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப் பட்டுள்ளன.
கடும் நடவடிக்கை
 குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்களில் 2 பேர்களுக்குமேல் செல்லக்கூடாது. மேலும் வாகனங்கள் செல்லும்போது சாகசங்கள் செய்வது போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
கோவிலுக்கு வருபவர்கள் கொரோனா நோய் தொற்றை தவிர்க்க முக கவசம் அணிந்து தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்கோஷ்டியூர், மடப்புரம், காளையார்கோவில் குன்றக்குடி ஆகிய இடங் களில் புத்தாண்டையொட்டி கூடுதலாக 1,500 போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது தனிப்பிரிவு இன்ஸ் பெக்டர் முத்து செல்வன் உடன் இருந்தார்.

Next Story