20 ஆண்டுக்கு பிறகு உசிலம்பட்டி கண்மாய் நிரம்பியது


20 ஆண்டுக்கு பிறகு உசிலம்பட்டி கண்மாய் நிரம்பியது
x
தினத்தந்தி 30 Dec 2021 7:14 PM GMT (Updated: 2021-12-31T00:49:05+05:30)

20 ஆண்டுக்கு பிறகு உசிலம்பட்டி கண்மாய் நிரம்பியது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மலர் தூவி வரவேற்றார்.

உசிலம்பட்டி,

20 ஆண்டுக்கு பிறகு உசிலம்பட்டி கண்மாய் நிரம்பியது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மலர் தூவி வரவேற்றார்.

கண்மாய் நிரம்பியது

 உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாயில் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் திண்டுக்கல், உசிலம்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
50 ஏக்கர் பரப்பளவு கொண்ட உசிலம்பட்டி கண்மாய் 20 ஆண்டுகளுக்கு பின் முழு கொள்ளளவை எட்டி நேற்று மறுகால் பாய்ந்தது. இந்த மறுகால் வழியாக பாயும் தண்ணீர் ஆனையூர், பொட்டுலுபட்டி கண்மாய்களுக்கு சென்று கொண்டிருக்கிறது.

மலர் தூவி வரவேற்பு

20 ஆண்டுக்கு பிறகு உசிலம்பட்டி கண்மாய் நிரம்பி உள்ளதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், உசிலம்பட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அய்யப்பன் தலைமையிலான அ.தி.மு.க.வினர் கண்மாய் மலர் தூவி தண்ணீரை வரவேற்றனர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நீதிபதி, பெரியபுள்ளான், தமிழரசன், உசிலம்பட்டி நகர் செயலாளர் பூமாராஜா, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா, மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் துரை தனராஜன், மாவட்ட கவுன்சிலர் சுதாகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் வக்கீல் மகேந்திரபாண்டி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் போத்திராஜா, நகர் பேரவை செயலாளர் வக்கீல் லட்சுமணன், எழுமலை நகர செயலாளர் வாசிமலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடைமடை கண்மாய்

பின்னர் நிருபர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசியதாவது:-
 அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்த 58 கிராம கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டு 3 முறை சோதனை அடிப்படையில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்ேபாது விவசாயிகளோடு, அ.தி.மு.க.வினர் அரசுக்கு கோரிக்கை விடுத்ததன் பேரில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் 58 கிராம கால்வாயின் கடைமடை கண்மாய் நிரம்பும் வரை தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story