இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: நெல்லை, தென்காசியில் 3,500 போலீசார் பாதுகாப்பு


இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம்: நெல்லை, தென்காசியில் 3,500 போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 30 Dec 2021 9:50 PM GMT (Updated: 30 Dec 2021 9:50 PM GMT)

நெல்லை, தென்காசியில் 3,500 போலீசார் பாதுகாப்பு

நெல்லை:
இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட்டம்
2021-வது ஆங்கில ஆண்டு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. நள்ளிரவு 12 மணிக்கு 2022-ம் ஆண்டு பிறக்கிறது. இதையொட்டி இன்று நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது. இதே போல் இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் தங்களது வீடுகளில் ஆங்கில புத்தாண்டை வரவேற்கிறார்கள்.
போலீஸ் பாதுகாப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. நெல்லை மாநகரில் 500 போலீசார், புறநகர் மாவட்டத்தில் 1,500 போலீசார், தென்காசி மாவட்டத்தில் 1,500 போலீசார் என 2 மாவட்டங்களிலும் 3,500 போலீசார் நள்ளிரவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி வருவோரை கைது செய்யவும், அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனை போலீசார் தீவிரமாக அமல்படுத்த இருப்பதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
..........

Next Story