பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை  தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 31 Dec 2021 4:44 PM GMT (Updated: 2021-12-31T22:14:44+05:30)

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மன்னன்தேவதாஸ் மகன் ரஜினிராஜன் (வயது 35), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வந்த 12 வயதுடைய மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதையறிந்ததும் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து, இதுபற்றி திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜினிராஜனை கைது செய்தனர்.

தொழிலாளிக்கு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமாரவேல், குற்றம் சாட்டப்பட்ட ரஜினிராஜனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 9 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரஜினிராஜன், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலா ஆஜரானார்.

Next Story