துபாயில் இருந்து வந்த திருப்பத்தூர் வாலிபருக்கு ஒமைக்ரான்


துபாயில் இருந்து வந்த திருப்பத்தூர் வாலிபருக்கு ஒமைக்ரான்
x
தினத்தந்தி 1 Jan 2022 12:00 AM IST (Updated: 1 Jan 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் இருந்து வந்த திருப்பத்தூர் வாலிபருக்கு ஒமைக்ரான் தோற்று அறிகுறி இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர்

துபாயில் இருந்து வந்த திருப்பத்தூர் வாலிபருக்கு ஒமைக்ரான்  தோற்று அறிகுறி இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து வந்த வாலிபர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் கும்மிடிகான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது வாலிபர். துபாயில் பணியாற்றி வருகிறார். தற்போது துபாயில் இருந்து அவர் இந்தியா திரும்பினார். துபாயில் இருந்து கடந்த 28-ந் தேதி சென்னை வந்தார். அப்போது அவர் அங்கிருந்து கொரோனா தோற்று இல்லை என்று சான்று பெற்று வந்துள்ளார்.

சென்னை வந்ததும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஊருக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து திருப்பத்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரான கும்மிடிகான்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளார். கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை அவரை வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

ஒமைக்ரான் உறுதி
அதன்படி அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். இந்த நிலையில் 30-ந் தேதி அவருக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதாக கூறி வந்த தகவலின் அடிப்படையில் அவரை திருப்பத்தூர் அரசு மருத்துமனையில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வந்த பரிசோதனை முடிவில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து சுகாதாரத் துறையினர் அவரது குடும்பத்தில் இருந்த தாய், தந்தை, மனைவியை தனிமைப்படுத்தினர்.

மேலும் கிராமம் முழுவதும் தடுப்பு மருந்துகள் அடிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி போடாத நபர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் முதன்முறையாக ஒருவருக்கு ஒமைக்கரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Next Story