ராட்டிணமங்கலம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் தர்ணா போராட்டம்
வார்டு உறுப்பினர் தர்ணா போராட்டம்
ஆரணி
ஆரணியை அடுத்த ராட்டிண மங்கலம் ஊராட்சி ஈ.பி. நகர் பகுதியில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் தினமும் சுமார் 2 மணிநேரம் தண்ணீர் வீணாவதாக வார்டு உறுப்பினர் குமார், தலைவரிடம் புகார் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர் உதயமன் என்பவர் வார்டு உறுப்பினரை திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வார்டு உறுப்பினர் குமார், ஊராட்சி தலைவர் செல்வத்திடம் கூறியும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இதநால் வார்டு உறுப்பினர் குமார், ராட்டிணமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேற்று தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே ஆபரேட்டர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர் உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசனிடமும் புகார் அளிக்கப்பட்டது. அவரும் நடவடிக்கை எடுப்பதாக கூறியதன்பேரில் போராட்டத்தை கைவிட்டார்.
Related Tags :
Next Story