நெமிலி அருகே ரூ.9 லட்சத்தில் 2 புதிய டிரான்ஸ்பார்மர்கள்


நெமிலி அருகே ரூ.9 லட்சத்தில் 2 புதிய டிரான்ஸ்பார்மர்கள்
x
தினத்தந்தி 1 Jan 2022 12:01 AM IST (Updated: 1 Jan 2022 12:01 AM IST)
t-max-icont-min-icon

ரூ.9 லட்சத்தில் 2 புதிய டிரான்ஸ்பார்மர்கள்

நெமிலி

நெமிலியை அடுத்த சயனபுரம் கிராமத்தில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் 63 கே.வி. திறன் கொண்ட 2 புதிய மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு, அதன் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு அரக்கோணம் மின் பகிர்மான கோட்ட செயற்பொறியாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் பவானி வடிவேலு முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் சரவணகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு பங்கேற்று புதிய மின்சார டிரான்ஸ்பார்மரின் செயல்பாட்டை தொடங்கி வைத்து இனிப்புகளை வழங்கினார். 

விழாவில் மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், மங்கையர்கரசி சுப்பிரமணி, தனசேகரன், முஹம்மது அப்துல் ரஹ்மான், சங்கர், உதவி செயற்பொறியாளர் துரைசங்கரன் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Next Story