கண்ணமங்கலம் அருகே ரூ.20 லட்சம் செம்மரம், வேன் பறிமுதல்
ரூ.20 லட்சம் செம்மரம், வேன் பறிமுதல்
கண்ணமங்கலம்
கண்ணமங்கலத்தை அடுத்த கல்பட்டு கிராம மலையடிவாரத்தில் ஒரு குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தது. அதன்பேரில் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கல்பட்டு கிராம மலையடிவாரத்துக்கு சென்று அங்கிருந்த ஒரு குடோனில் சோதனை செய்தனர்.
அங்கு பதுக்கி வைத்திருந்த ஒரு டன் எடையிலான ரூ.20 லட்சம் செம்மரக்கட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ேவன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். செம்மரக்கட்டைகளை பதுக்கியது நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த செம்மரக்கட்டைகள் மற்றும் வேனை போலீசார் சந்தவாசல் வனச்சரகர் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story