குண்டர் சட்டத்தில் 2 வாலிபர்கள் கைது


குண்டர் சட்டத்தில்  2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 1 Jan 2022 12:41 AM IST (Updated: 1 Jan 2022 12:41 AM IST)
t-max-icont-min-icon

குமரியில், கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்:
குமரியில், கஞ்சா மற்றும் அடிதடி வழக்குகளில் தொடர்புடைய 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா வியாபாரி
பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் காலனி ரோடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் ராஜன் (வயது 23). இவர் மீது பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதனால், சுரேஷ் ராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று சுரேஷ்ராஜனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதனைதொடர்ந்து அவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து நேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
வாலிபர் கைது
இதேபோல் கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் மைக்கேல் (26). இவர் மீது இரணியல், திருவட்டார், கோட்டார் ஆகிய போலீஸ் நிலையங்களில் அடிதடி வழக்குகள் உள்ளன. போலீசாரின் எச்சரிக்கையை மீறி மைக்கேல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதையடுத்து மைக்கேலை மார்த்தாண்டம் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Next Story