நிலத்தை அளக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியர் கைது
உசிலம்பட்டியில் நிலத்தை அளக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியரும், அவருடைய அண்ணனும் கைது செய்யப்பட்டனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியில் நிலத்தை அளக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியரும், அவருடைய அண்ணனும் கைது செய்யப்பட்டனர்.
ரூ.4 ஆயிரம் லஞ்சம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், தேனி ரோட்டில் உள்ள நில அளவர் துறை அலுவலகத்தில் குறுவட்ட நில அளவையராக பணியாற்றியவர் காஞ்சனா (வயது 40). இவரிடம் நக்கலப்பட்டி ஊராட்சி பூச்சிபட்டியை சேர்ந்த மாயாண்டி மகன் ரஞ்சித்குமார் என்பவர் தனது நிலத்தை அளந்து கொடுக்குமாறு கூறியுள்ளார்.
நிலத்தை அளப்பதற்கு நில அளவையர் காஞ்சனா ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித்குமார் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.
அண்ணனுடன் கைது
இதையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் 1 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் பிரபு ஆகியோர் தலைமையிலான போலீசார், ரஞ்சித்குமாரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை கொடுத்தனர்.
இந்த பணத்தை நில அளவையர் காஞ்சனாவிடம் ரஞ்சித்குமார் கொடுத்த போது அங்கு மறைந்து நின்றிருந்த போலீசார் கையும், களவுமாக காஞ்சனாவை கைது ெசய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது அண்ணன் செந்தில்குமாரையும் (42) கைது செய்தனர்.
கைதான 2 பேரிடமும் நில அளவை துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் கைதான 2 பேரையும் அங்கிருந்து அழைத்து சென்றனர்.
Related Tags :
Next Story