வடமதுரை அருகே மகன் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த பெண் சாவு


வடமதுரை அருகே மகன் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த பெண் சாவு
x
தினத்தந்தி 1 Jan 2022 1:25 AM IST (Updated: 1 Jan 2022 1:25 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே மகன் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வடமதுரை:
வடமதுரை அருகே தென்னம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி மகன் சதீஷ்குமார் (வயது 27). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது தாய் பஞ்சவர்ணம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்குமார் கடந்த 27-ந்தேதி தனது தாயை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். மேலும் பஞ்சவர்ணத்தின் மீது தென்னை மட்டைகளை போட்டு தீயை வைத்தார். இதில் படுகாயம் அடைந்த பஞ்சவர்ணத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுதொடர்பாக வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பஞ்சவர்ணம் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்தனர்.

Next Story