பட்டா மாறுதல் சிறப்பு முகாம்
சாத்தூர் அருேக நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் ரகுராமன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
சாத்தூர்,
சாத்தூர் அருேக நடைபெற்ற பட்டா மாறுதல் சிறப்பு முகாமில் ரகுராமன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
சிறப்பு முகாம்
சாத்தூர் தாலுகா ஒ.மேட்டுப்பட்டியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் ரகுராமன் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் புஷ்பா, வட்டாட்சியர் சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒ.மேட்டுப்பட்டி கிராம பொதுமக்கள் பட்டாமாறுதல், வீட்டுமனை பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை கேட்டு 218 மனுக்கள் கொடுத்தனர்.
இதில் 22 மனுக்களுக்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு பட்டா மாறுதலுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.
ஏற்பாடு
இதில் ஊராட்சி மன்ற தலைவர் மாதவராஜ், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் முருகன், வருவாய் ஆய்வாளர் மாதவி, கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை, மற்றும் நில அளவை பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முகாமிற்கான ஏற்பாடுகளை தனி வட்டாட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் வெங்கடேஷ் செய்திருந்தார். இந்த முகாமில் திரளான பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மனுக்களை அளித்தனர்.
Related Tags :
Next Story