மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு


மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 1 Jan 2022 1:50 AM IST (Updated: 1 Jan 2022 1:50 AM IST)
t-max-icont-min-icon

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

சாத்தூர்,
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
இருக்கன்குடி 
சாத்தூர் அருகே இருக்கன்குடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. மார்கழி மாத வெள்ளிக்கிழமையையொட்டி  அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு  பால், பன்னீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. 
 நேற்று 2021-ம் ஆண்டின் இறுதி நாள் என்பதால் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு உச்சிகால விசேஷ பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
சாமி தரிசனம் 
அதேபோல சாத்தூர் முக்குராந்தலில் உள்ள மாரியம்மன் கோவில், வடக்கு ரத வீதியில் உள்ள காளியம்மன் கோவில், நாடார் கீழத்தெருவில் உள்ள மாரியம்மன் கோவில், பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள பத்ரகாளியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
இதில் பக்தர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர்.

Next Story