பெரம்பலூரில் புதிதாக 3 பேருக்கு கொரோனா


பெரம்பலூரில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Jan 2022 2:02 AM IST (Updated: 1 Jan 2022 2:02 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 3 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரியலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக யாரும் கொரோனாவினால் பாதிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று யாரும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. இதேபோல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 25 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 7 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 193 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 326 பேருக்கும் இன்னும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

Next Story