நாகர்கோவிலில் போலீஸ் நிலையங்களில் டி.ஐ.ஜி. ஆய்வு


நாகர்கோவிலில் போலீஸ் நிலையங்களில் டி.ஐ.ஜி. ஆய்வு
x
தினத்தந்தி 1 Jan 2022 2:06 AM IST (Updated: 1 Jan 2022 2:06 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு நேற்று போலீஸ்நிலையங்களில் ஆய்வு செய்தார்.

நாகர்கோவில், 
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு நேற்று நாகர்கோவில் வந்தார். அவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அறை, நில அபகரிப்பு தடுப்பு பிரிவு ஆகியவற்றில் வருடாந்திர ஆய்வை மேற்கொண்டார். அப்போது கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை கேட்டறிந்து பதிவேடுகளை ஆய்வு செய்தார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவிலும் பதிவேடுகளை பார்வையிட்டார்.
பின்னர் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு, போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு மற்றும் மறவன்குடியிருப்பு ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்ப நாய் பிரிவு ஆகியவற்றிலும் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு ஆய்வு மேற்கொண்டார். அவற்றில் உள்ள பதிவேடுகளையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது நாகர்கோவில் துணை சூப்பிரண்டு நவீன்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story