டாஸ்மாக் பார் டெண்டர் முறைகேட்டை தவிர்க்க கோரிக்கை
டாஸ்மாக் பார் டெண்டர் முறைகேட்டை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்ட பார் உரிமையாளர் நலச் சங்கத்தினர் கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த 30-ந் தேதி பார் டெண்டர் நடத்துவதாக இருந்தது. இதனை ஒத்திவைத்து 31-ந் தேதி நடத்துவதாக அறிவித்தனர். ஆனால் 30-ந் தேதியன்று இரவு டாஸ்மாக் கடைக்கு 120 பேர் விண்ணப்பத்தினை ஒரு நபர் வந்து இரவோடு இரவாக கொடுத்துள்ளனர். 120 பேரும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். விண்ணப்பம் கொடுக்க நேரில் வரவில்லை. நேரடியாக பெட்டியில் போட வரவில்லை. இதனை கண்காணிப்பு கேமரவை ஆய்வு செய்தால் இந்த விவரம் தெரியவரும். கடந்த 27-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை டாஸ்மாக் அலுவலகத்தில் உள்ள கேமராவை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளி மாவட்டத்தை சேர்ந்த 120 பேரும் டெண்டரில் நேரடியாக கலந்து கொள்வதாக தெரியவில்லை. எனவே 120 பேரும் நேரடியாக வந்தால்மட்டுமே அவர்களது விண்ணப்பத்தை ஏற்க வேண்டும். இல்லையென்றால் தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது நேரில் வந்துள்ளவர்களின் விண்ணப்பம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். டெண்டர் முறைகேட்டுக்கு தொடர்புடைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி நலச்சங்க தலைவர் நாகராஜன் தலைமையில் பார் உரிமையாளர்கள் டாஸ்மாக் அலுவலக வளாகத்திற்குள் போராட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story