புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 1 Jan 2022 2:14 AM IST (Updated: 1 Jan 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி

குப்பைகள் அகற்றப்பட்டது
கணபதிபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலன்கோட்டையில் ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த நீர்தேக்க தொட்டியின் அருகில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. உடனே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பைகள் அகற்றப்பட்டது. செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
சேதமடைந்த சாலை
சுற்றுலா தலமான மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் சாலை சேதம் அடைந்தது. தற்போது சாலையின் ஒரு பகுதி முற்றிலுமாக உடைந்து காணப்படுகிறது. இதனால், தொட்டிப்பாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெர்பின், மாத்தூர்.
சுகாதார சீர்கேடு
பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பூதப்பாண்டி பெருமாள்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு கோவிலின் பின்புறத்தில் குப்பைகளும், செங்கல்துண்டுகளும் கொட்டப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜலெட்சுமி, பூதப்பாண்டி.
ஓடையை தூர் வார வேண்டும்
பூதப்பாண்டி உச்சம்பாறை பகுதியில் ஒரு கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடை பல மாதங்களாக தூர்வாரப்படாமல் ெசடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் கொசு உற்பத்தி அதிகமாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஓடையை தூர்வாரி பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.நாராயணசாமி, பூதப்பாண்டி.
நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க வேண்டும்
கன்னியாகுமரியில் இருந்து ஒசரவிளை, அகஸ்தீஸ்வரம் வழியாக வடசேரிக்கு தடம் எண் 2 ஏ.வி. அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். தற்போது கடந்த 2 வார காலமாக இந்த வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பஸ்சை நம்பியிருந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
-ராசோ.கோபால், குலசேகரபுரம்.
சிக்னல் விளக்கு அமைக்க வேண்டும்
நாகர்கோவில், வெட்டூர்ணிமடம் சந்திப்பில் 3 சாலைகள் ேசருகின்றன. இந்த பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். வேகமாக வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேகத்தடை அல்லது சிக்னல் விளக்கு அமைக்கப்படுமா?
-வெங்கடேஷ், மேலபுத்தேரி.






Next Story