சேலத்தில் நகை தர ஆய்வு கடையில் ரூ.2 லட்சம், 2 பவுன் நகை திருட்டு-கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை
சேலத்தில் நகை தர ஆய்வு கடையில் ரூ.2 லட்சம், 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலத்தில் நகை தர ஆய்வு கடையில் ரூ.2 லட்சம், 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை தர ஆய்வு கடை
சேலம் டவுன் கணக்கர் தெருவை சேர்ந்தவர் நெக்கீல் பட்டேல். இவர், பெரியார் தெருவில் கணேஷ் டெஸ்டிங் என்ற பெயரில் நகை தர ஆய்வு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் நெக்கீல் பட்டேல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
பின்னர் அவர் நேற்று காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உள்ளே சென்றபோது, லாக்கரில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் நெக்கீல் பட்டேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைளை பதிவு செய்தனர். அதே சமயம், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் ஏதேனும் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில், கொள்ளையர்கள் 2 பேர் நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும், அதன்பிறகு அரைமணி நேரம் கழித்து அவர்கள் வெளியே செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. ஒருவர் பேண்ட், சட்டையும், மற்றொருவர் வேட்டியும் அணிந்துள்ளார். இதனால் அவர்கள் தான் நகை, பணத்தை திருடியிருக்கலாம் என்று சந்தேகத்தில் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story