ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா விதிமுறையை மீறிய 74 ஆயிரத்து 461 பேர் மீது வழக்கு- ரூ.1½ கோடி அபராதம் வசூல்


ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா விதிமுறையை மீறிய 74 ஆயிரத்து 461 பேர் மீது வழக்கு- ரூ.1½ கோடி அபராதம் வசூல்
x
தினத்தந்தி 1 Jan 2022 2:56 AM IST (Updated: 1 Jan 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா விதிமுறையை மீறிய 74 ஆயிரத்து 461 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு கொரோனா விதிமுறையை மீறிய 74 ஆயிரத்து 461 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1½ கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது. 
40 கொலை வழக்கு
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பதியப்பட்ட 40 கொலை வழக்குகளில் 73 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 4 ஆதாய கொலை வழக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் 322 வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 59 லட்சத்து 89 ஆயிரத்து 768 மதிப்புள்ள சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், லாட்டரி, மது விற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து மொத்தம் 5 ஆயிரத்து 142 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் கஞ்சா விற்பனை செய்த 218 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 370 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 
மது -சாராயம் விற்பனை
அரசு மதுபானங்கள், வெளிமாநில மதுபானங்கள் கள்ளச்சந்தையில் பதுக்கியும், சாராயம் விற்பனை செய்த 4 ஆயிரத்து 744 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 72 ஆயிரம் மதுபான பாட்டில்கள் மற்றும் 270 லிட்டர் சாராயம், 1,834 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 17 ஆயிரத்து 80 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டு உள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 6 லட்சத்து 3 ஆயிரத்து 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 கோடியே 24 லட்சத்து 4 ஆயிரத்து 320 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு 23 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கொரோனா விதிமீறல்
இணையவழி மூலமாக மோசடி செய்து ஏமாற்றப்பட்ட ரூ.16 லட்சத்து 24 ஆயிரத்து 159 பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக முக கவசம் அணியாத 71 ஆயிரத்து 957 பேர் மீதும் விதிமீறல்கள் தொடர்பாக 2 ஆயிரத்து 504 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 56 லட்சத்து 43 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சகிமோகன் தெரிவித்து உள்ளார்.

Next Story