தாலுகா அலுவலகத்தில் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த கிராம மக்களால் பரபரப்பு
ரேஷன் கார்டுகளை ஒப்படைத்த கிராம மக்களால் பரபரப்பு
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட குறிஞ்சாக்குளம் கிராமத்தில் குருவிகுளம் - திருவேங்கடம் சாலையில் கீழ்ப்புறத்தில் உள்ள உள்ள விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு தினத்தன்று விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது வழக்கம். ஆனால் பல்வேறு காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக விளையாட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு விளையாட்டு போட்டிக்கு அப்பகுதி கிராம மக்கள் திருவேங்கடம் போலீசாரிடம் அனுமதி கோரிய போது, அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குறிஞ்சாக்குளம் கீழத்தெரு கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தில் தங்களது ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க வந்தனர்.
தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில், பனவடலிசத்திரம், கரிவலம்வந்தநல்லூர், குருவிகுளம் உள்ளிட்ட பகுதியில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். முற்றுகையிட வந்த பொதுமக்களிடம் திருவேங்கடம் தாசில்தார் சத்தியவள்ளி, தென்காசி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், சங்கரன்கோவில் துணை சூப்பிரண்டு ஜாகிர் உசேன் மற்றும் அரசு அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் குறிஞ்சாக்குளம் கீழத்தெரு கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதிகாரிகள் வாங்க மறுத்ததால் பொதுமக்கள் தாசில்தாரின் மேஜை மீது ரேஷன் கார்டுகளை வைத்து விட்டு சென்றனர். இதனால் தாலுகா அலுவலக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story