குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கிடக்கும் பாறைகளால் விபத்து அபாயம்


குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கிடக்கும் பாறைகளால் விபத்து அபாயம்
x
தினத்தந்தி 1 Jan 2022 4:50 PM IST (Updated: 1 Jan 2022 4:50 PM IST)
t-max-icont-min-icon

குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கிடக்கும் பாறைகளால் விபத்து அபாயம்

குன்னூர்

குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் கிடக்கும் பாறைகளால் விபத்து அபாயம் ஏற்படுகிறது. அதனால் அந்த பாறைகளை அகற்றி மலைப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். 

சாலை விரிவாக்கப்பணி

நீலகிரி மாவட்டம் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டதாகும்.. மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மலைகளை குடைந்தும், ஆறுகளின் மீது பாலங்கள் அமைத்தும் சாலை உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலை மலைப்பாதையாக உள்ளது. 
குறுகியதாக உள்ள இந்த சாலையில் வாகன போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு வாய்ப்புள்ள இடங்களில் சாலை விரிவுபடுத்தும் பணியை தேசிய நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. அதன்படி குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சுமார் 14 இடங்களில் சாலை விரிவாக்கப் பணி, கால்வாய் அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

வாகன ஓட்டிகள் கோரிக்கை 

மேலும் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம்களில் பெய்த கனமழையினால் சாலை ஓரத்தில் பாறைகள் சரிந்து அந்தரத்தில் தொங்கிய காட்சி அளிக்கின்றன. காட்டேரி முதன்மரப்பாலம் இடையேயுள்ள சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் இடத்தில் பாறைகள் சாலையோரத்தில் கிடக்கிறது. இதனால் அங்கு அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. 
தற்போது குன்னூர் பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் சாலையின் மேற்புறத்திலுள்ள பாறைகள் விழும் அபாயத்தில் உள்ளன. எனவே இந்த பாறைகளை உடைத்து அப்புறப்படுத்தும் பணியை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story