போலீசார் அதிரடி சோதனை


போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 1 Jan 2022 8:20 PM IST (Updated: 1 Jan 2022 8:20 PM IST)
t-max-icont-min-icon

போதைப்பொருள் தடுப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடம் அருகில் உள்ள மருந்துகடைகளில் அடிமை பழக்கத்தை உருவாக்கக்கூடிய மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு மேற்பார்வையில் போதை பொருள் நுண்ணறிவு புலனாய்வுப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் மற்றும் போலீசார் மருந்து கட்டுப்பாட்டு பிரிவு ஆய்வாளர் பிரபுவுடன் ராமநாதபுரம், கீழக்கரை நகர் பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் 1940-ன் படி விதிமீறல்கள் ஏதும் நடைபெறவில்லை என தெரிந்தது. எனினும் மருத்துவரின் முறையான பரிந்துரை சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்துகள் வழங்கினாலோ அனு மதிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு மருந்துகள் விற்பனை செய்தாலோ அரசு உரிமம் வழங்கப் படாத மருந்துகளை விற்பனை செய்தாலோ மருந்தகங்களில் சரியான பதிவேடு ஆவணங்கள் பராமரிக்கப்படாமல் இருந் தாலோ சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட மருந்தகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என மருந்தக உரிமையாளர்களிடம் எச்சரித்தனர். மருந்தகங் களில் மேற்கண்ட ஏதேனும் முறைகேடு தெரிய வந்தால் பொது மக்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் 9498410581 என்ற அலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். என்று இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.

Next Story